ஸ்விக்கி புதுசா ஒரு திட்டம் கொண்டுவந்து இருக்காங்க உங்களுக்கு அது என்னனு தெரியுமா?
ஸ்விக்கி ஆப் சில நிபந்தனைகளுடன் மதுபானங்களை வீடு தேடி விற்பனை செய்ய போகிறது.
உணவுவிநியோகம் செய்வதறக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆப் ஸ்விக்கி தற்பொழுது இது வேறு சில பரிணாமங்களை எடுத்துள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் இந்த ஆப் மாநகரங்களுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு
உதவியாக இருந்தது போல் மதுபிரியர்களுக்கும் உதவலாமே என்ற நோக்கத்தோடு தனது சேவையை தொடங்கி உள்ளது போலும் 😉.
ஆமாங்க! ஜார்கண்ட் அரசாங்கத்திடம் போதிய ஒப்புதல்களை பெற்று தங்களது சேவையை தொடங்கி உள்ளதாம். தற்பொழுது ராஞ்சியில் வீடு தேடி விற்பனை செய்கிறது. இனி என்னவெல்லாம் நடக்க போகிறதோ! ஆனால் இது Wine Shops’ (ஒயின் ஷாப்ஸ்) என்ற புதிய பிரிவின் கீழ் நடக்குதாம்.ஸ்விக்கி வழியாக மதுபானம் வாங்க போகும் மதுபானப்பிரியார்கேலே ! நீங்கள் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்கள் இதோ!
"எல்லாவித ஆர்டர்களும் ஒரு குறிப்பிட்ட OTP- ஐ கொண்டே நிகழும்."
ஆர்டர் டெலிவரி செய்யபடும் பொழுது வாடிக்கையாளர்கள் OTP-ஐ காட்டவேண்டும்.
ஒரு வாடிக்கையாளர் மாநில சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஆல்கஹால் ஆர்டர் செய்யக்கூடாது, செய்யவும் முடியாது.😋
இந்த சேவையைப் பெற, ராஞ்சியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்விக்கி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதன் வழியாக 'ஒயின் ஷாப்ஸ்' பிரிவை அணுக முடியும்" என்று ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வழியிலான மதுபான விற்பனைக்கு ஸ்விக்கி அறிவித்துள்ள சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிது. உங்கள் வயதை சரிபார்க்க உங்களுடைய ஒரு அரசாங்க ID PROOF தேவை. அந்த ID -யை உங்கள் கையில் பிடித்தவாறு ஒரு செல்பீ எடுத்து அதை ஸ்விக்கி ஆப்பில் பதிவிட வேண்டும் 😲. நீங்கள் ஆன்லைனில் எத்தனை பாட்டில்களை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும், அதுவும் சரிபார்க்கப்படும். பின்னர் உங்கள் ஆர்டரைப் பெற்றதும் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய OTP-ஐ ஆப் வழியாக பெறுவீர்கள், அவ்வளவுதான்க!👍
ஆனால் ஆன்லைன் வழியாக மதுபான விற்பனைக்காக ஸ்விக்கி நிறுவனம் எவ்வளவு சார்ஜ் செய்யும் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய முதல் நகரம் ராஞ்சி ஆகும். தேவையான அரசாங்க ஒப்புதல்களைப் பெற்றபின், இந்தியா முழுவதிலும் உள்ள பிற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தும் என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.காத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.😃😃
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்க ஏற்கனவே பல மாநில அரசாங்கங்களுடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் ஹோம் டெலிவரி ஒரு வாரத்திற்குள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஸ்விக்கி ராஞ்சி நகரில் தொடங்கி, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வழியில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்வதாக கூறுகிறது. கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்க்கும் மற்றும் சமூக தூரத்தை ஊக்குவிக்கப்பதற்க்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றும் ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளதாம்.
OHHHHH OH!


Comments
Post a Comment