பெண்கள் இரவில் மின்சார விளக்கை அணைக்காமல் தூங்குவதால் உடல் எடை கூடுமா?

பெண்கள் இரவில் விளக்கை அணைக்காமல் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா?குறைக்குமா இதை பற்றிய தெளிவான தகவல் இதோ!



பெண்கள் இரவில் வெளிச்சத்தில் தூங்கும் பொழுது, அதாவது செயற்கை 
வெளிச்சத்தில் மின்சார விளக்குகளை அணைக்காமல் தூங்குவது அவர்களின் உடல் எடையைக் கூட்டுமா என்கிற ஆய்வுகள் நடந்து உள்ளன. இந்த ஆய்வு ஜாமா இன்டர்நேஷனல் மெடிசின் என்கிற புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டது. அது முதலில் செயற்கை மின் விளக்கும் இரவுக்கும் பெண்களுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கியுள்ளது. இந்த ஆய்வில் முடிவில் கூறுவது என்னவென்றால் பெண்கள் இரவில் தூங்கும் பொழுது மின்சார விளக்கை அனைத்து விட்டு தான் தூங்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் மின்சார விளக்கை அணைக்காமல் தூங்குவது அவர்களின் உடல் எடை ஏறிவிடும் என்று அந்த ஆய்வில் கூறியிருக்கிறார்கள்.


ஆசிரியர் யோங் மூன் என்பவர் அந்த ஆய்வில் பல விதமான பெண்களை வைத்தே ஆராய்ச்சி செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிக்காக கிட்டத்தட்ட 43 ஆயிரத்து 727 பெண்களின் தகவல்களை வைத்து ஆய்வு நடைபெற்றதாக அவர் கூறியிருக்கிறார். இதில் பலரும் 35 முதல் 64 வயது உள்ளவராக இருந்திருக்கின்றனர். இவர்களில், ஏற்கனவே புற்று நோய் அல்லது இதய சம்பந்தப்பட்ட நோய்கள், அல்லது இரவு நேர வேலை பார்ப்பார்கள் பகலில் தூங்குவார்கள் போன்ற யாரும் இதில் பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர்.

உங்களுக்கு முடி கொற்ற பிரச்சனை இருக்கா ?  தலை சீவும் போதெல்லாம் முடி கொட்டிக்கிட்டே இருக்கா? உங்க வீட்ல இருக்க பொருட்களை வச்சி   பயன்படுத்தறது எப்படி?

இதில் இந்தப் பெண்களிடம் பல வகையான கேள்விகள் கேட்கப்பட்டது என்று கூறுகின்றனர். இது முதல் கேள்வி. நீங்கள் இரவில் மின்சார விளக்கை அணைத்து விட்டு தூங்குபவரா? மின்சார விளக்குடன் தூங்குபவரா? என்று கேட்கப்பட்டது. மேலும் அறைக்கு வெளியே விளக்கு பயன்படுத்தப்படுகிறதா அறைக்குள் தொலைக்காட்சி இருக்குமா என்ற பல வகையான கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஆராய்ச்சியாளர்கள் பெண்களின் உயரம், எடை, இடுப்பளவு, உடல் பிஎம்ஐ, போன்றவற்றை கணக்கில் எடுத்தார்கள். பின்பு அவர்களின் அனைத்து பதில்களையும் எழுதி வைத்துக் கொண்டார்கள். அவர்கள் எடை, உணவு முறை, போன்றவற்றையும் குறித்து கொண்டார்கள். ஐந்து வருடம் இவர்களை பின்தொடர கேட்டுக்கொண்டார்கள்.


இந்த தகவல்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் உடல் எடை, வெளிச்சத்தின் மூலம் பெண்களுக்கு அதிகரிக்கிறதா, குறிப்பாக இரவில் தூங்கும் பொழுது மின்சாரத்தினால் பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதா, இரவு இருட்டில் தூங்குவதால் வேறு ஏதும் பிரச்சினை ஏற்படுகிறதா,என்று பலவிதமான ஆய்வுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆய்வின் முடிவு பல விதமாக நடைபெற்று உள்ளது. குறிப்பாக இரவு குறைந்த வெளிச்சத்தோடு தூங்குவது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை என்று கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது அவர்களின் உடல் எடையை கூட்டுவது போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அதிக வெளிச்சத்துடன் தூங்குவது, அதாவது, அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்சார விளக்கு அல்லது தொலைக்காட்சி ஆகியவை அணைக்காமல் தூங்குவது கிட்டத்தட்ட 17 சதவீத பெண்களுக்கு 5 கிலோ, இல்லை அதற்கும் மேலாக எடை கூடியுள்ளது என்று கூறியுள்ளார்கள்.

பழைய மொபைல் -லிருந்து புதிய மொபைல் -கு Whats Up files ஐ எப்படி transfer  செய்வது?


இந்த பத்திரிகையின் இன்னொரு எழுத்தாளரான சந்திரா ஜாக்சன் என்பவர், ஆய்வில் கலந்துகொண்ட பலவிதமான பெண்களும் நகரத்து பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். நகரத்தில் பெரும்பாலும் இரவில் வெளியே அதிகப்படியான வெளிச்சங்கள் இருக்கும். தெருவிளக்குகள், எழுத்து பலகைகளில் உள்ள விளக்குகள், போன்றவை இரவில் பிரகாசமாக மின்னும். அவை நம் ஜன்னல் வழியாக வந்து, அறையினுள் நன்றாகவே வெளிச்சம் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் வாழ்பவர்களே 24 மணி நேரமும் செயற்கையான வெளிச்சத்திற்கு ஆளாகின்றனர். இந்த வெளிச்சமானது அவர்கள் தூக்கத்தில் ஏற்படக்கூடிய மெலடோனின் என்ற ஹார்மோன் என்பது பெரிதளவில் செயல்படாமலேயே அவர்களுக்கு போய் விடுகிறது. இதனால் 24 மணி நேரமும் இருட்டு அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் உடல் எடை அதிகரித்து உள்ளது என்று கூறியிருக்கிறார்.


மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழப் பழகியவர்கள். பல ஆயிரம் வருடங்களாக இயற்கை வெளிச்சத்திலேயே வாழ்ந்து பழகியவர்கள். அந்த இயற்கை முறையிலேயே உடலும் இயங்கவேண்டும். பகலில் வெளிச்சமாகவும், இரவில் இருட்டாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன் என்பது சரியான முறையில் சுரந்து, நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் கொடுக்கும். இந்த ஹார்மோனின் நாம் தொந்தரவு செய்யும் பொழுது பல விதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இரவில் தூங்கும்போது, வெளிச்சம் இருப்பது இந்த ஹார்மோன் பிரச்சினையை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கிறது.

Comments

Popular posts from this blog